17 Oct முன்களப் பணியாளர் நாளைய வரலாற்றின் அடையாளம்! – அன்வார்
ரவாங் அக்டோபர்-17
கோவிட்-19 தாக்கம் உலகத்தை வாட்டி எடுத்த தருணத்தில், காக்கும் அரணாக மனிதத்தை நிலை நாட்டியவர்கள் முன்களப் பணியாளர்கள். அதில் முதன்மையானவர்கள் மருத்துவத் துறையில் உள்ளவர்கள் என டத்தோ ஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.
இன்று இது பாதிப்பாகப் பார்க்கப்படுகிறது வரும் காலங்களில் இது ஒரு வரலாறு. அந்த வரலாற்றின் அடையாளம் முன்களப் பணியாளர்கள் என டத்தோ ஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.
அப்படிப்பட்டவர்களை கவுரவிக்க என்னை அழைத்தற்கு நான் எஸ்.பி. கேர் கிளினிக்கின் இயக்குனர் டாக்டர் சத்ய பிரகாஷுக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். அதிலும், மருத்துவ ரீதியில் மக்களுக்குக் கைகொடுத்த எஸ்.பி.கேர் மருத்துவக் குழு, டாக்டர் சத்ய பிரகாஷ் தலைமையில் சிலாங்கூர் ,கோலாலம்பூரில் சுமார் 5000 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் உதவிகளை நேரடியாகக் கொண்டு போய் சேர்த்தது பாராட்டக்கூடிய விஷயம் எனக் கூறிய இந்த மனிதநேய பண்பு மலேசியர்களாக நம்மை உயர்த்தும் என்றார்.
மருத்துவர், தாதியர், மருத்துவ உதவியாளர்கள் என எஸ்.பி.கேர் கிளினிக்கைச் சேர்ந்த சுமார் 50 பேரை டத்தோ ஸ்ரீ அன்வார் கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரபல தொழில் அதிபர் ஓம்ஸ் தியாகராஜன், தமிழ் மலர் நிர்வாகி டத்தோ பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இருந்து ஆதாரம்: http://www.tamillens.com/single_news/2743